அடடே… இந்த காலத்துல இப்பிடி ஒரு நல்லவரா….? சொந்தமாக மொபைல் இல்லாத திமுக வேட்பாளர்….

  • தகவல் தொழில்நுட்ப உலகத்தில் சொந்தமாக மொபைல் போன் கூட வைத்திருக்கவில்லை இலக்கியதாசன்.

வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த தேர்தலுக்கான சிறப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களது கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அறிக்கையை அறிவித்துள்ளனர். இந்நிலையில், மானாமதுரை தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் இலக்கியதாசனை அறிவித்துள்ளனர். இவர், எளிமையான தோற்றம், இயல்பான பேச்சு, பழக்கவழக்கம் தன்னை வெற்றி பெற வைக்கும் என்ற நம்பிக்கையில் தொகுதிக்குள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த தகவல் தொழில்நுட்ப உலகத்தில் சொந்தமாக மொபைல் போன் கூட வைத்திருக்கவில்லை. குடும்பத்தில் உள்ளவர்கள் மூலமாகத் தான் தொடர்பு கொள்ள முடியும். அவர் வெளியில் சென்றாலும், மனைவியிடம் தெரிவித்துவிட்டுச் செல்வார். இவர் எம்ஏ., பிஎச்டி முடித்துள்ளார்.

இந்நிலையில், இந்த தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், தலைவர்கள், நிர்வாகிகளிடம் தொடர்பு கொள்ள வேண்டி இருப்பதால் புதிதாக மொபைல் போன் வாங்கி உள்ளாதாக கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment