இந்த முறையும் கோப்பையை தட்டி தூக்கும்.. பிராவோ நம்பிக்கை

  • தமிழ் மக்களிடையே நீங்காத இடம் பிடித்த நம்பிக்கை நட்சத்திரம் ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ. 
  • இந்த முறையும் கோப்பையை நாங்கள் நிச்சயம் வெல்லுவோம்

முதல் இரண்டு சீசன்களில் மும்பை அணிக்காக ஆடி விட்டு பிறகு சென்னை அணியில் வந்து தமிழ் மக்களிடையே நீங்காத இடம் பிடித்த நம்பிக்கை நட்சத்திரம் ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ.

சென்ற வருடம் இவரை ஏலத்தில் விட்டு விட்டு பிறகு எடுத்த சென்னை அணிக்கு மிகவும் விசுவாசமாக செயல்பட்டு பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் நன்றாக தன் திறமையை வெளிப்படுத்தினார்.

இதற்கு முன்பாக பலமுறை அணியின் வெற்றிக்கு வித்திட்ட இருக்கிறார். கடைசி நிமிடங்கள் வரை போராடியே தீரவேண்டும் என்று குணம் படைத்த இவரை சென்னை அணிக்கு மிகவும் பிடித்துவிட்டது.

இந்நிலையில், இந்த முறையும் கோப்பையை நாங்கள் நிச்சயம் வெல்லுவோம். உங்கள் மேல் இன்னும் கரை படிந்து தான் உள்ளது அதை இல்லை என்று நிரூபிக்க தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்தார்

author avatar
Vignesh

Leave a Comment