இந்த தோற்றம் தாம் நம்மை விரும்பத்தக்கவராக மாற்றுகிறது!

நடிகை சமந்தா தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தெலுங்கில் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில்,  2019ஆம் ஆண்டிற்கான ஆங்கில பத்திரிக்கை ஒன்று நடத்திய மிகவும் விரும்பக்கத்தக்க பெண்கள் பட்டியலில் சமந்தா முதலிடம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் என் கணவருடன் செல்லும்போது கவர்ச்சிகரமாகவும், பிடித்தமானவளாகவும் இருப்பதாக உணர்கிறேன். ஒவ்வொருவருக்குமே நம்பிக்கை ஒரு பெரிய காரணி. உடல் தோற்றத்தை விட மனத்தோற்றமே ஒருவரை விரும்பதக்கவராக மாற்றுகிறது என நான் கருதுகிறேன்’ எனக் கூறியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.