வெயிலுக்கு இந்த ஜூஸ் குடிங்க, அடடே இந்த ஜூஸ் அருந்துவதால் இவ்வளவு நன்மைகளா ?

முள்ளங்கி ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் பயன்கள். நமது அன்றாட நமது

By leena | Published: Apr 01, 2019 01:59 PM

  • முள்ளங்கி ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் பயன்கள்.
நமது அன்றாட நமது சமையல்களில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது அனுதின உணவில் காய்கறிகள் இடம் பெறாத உணவே இருக்காது. இந்நிலையில், தற்போது இந்த பதிவில், முள்ளங்கி ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம். Related image வெயில் காலங்களில் நமது உடலுக்கு, நீர்சத்து அதிகமாக தேவை. ஏனென்றால், நமது உடலில் உள்ள நீர்சத்துக்கள் வெயில் காலங்களில் வெகு விரைவாக வற்றி விடும். எனவே வெயில் காலங்களில் நீர்சத்து உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். அந்த வகையில் முள்ளங்கி நீர்சத்து நிறைந்த ஒரு காய்கறி தான்.

இதயம்

முள்ளங்கி இதயம் சம்பந்தப்பட்ட நோயாளை குணமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள் தினமும் முள்ளங்கி சாறு அருந்தி வந்தால் இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறலாம். Image result for இதயம் மேலும், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் நம்மை தாக்காமலும் பார்த்து கொள்ளலாம்.

சிறுநீரக கற்கள்

சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். அதிலும், அதிகமாக சிறுநீரக கற்கள் உருவாகி அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தண்ணீர் அதிகம் அருந்தாமை, உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீரை குடிப்பது போன்ற காரணங்களால் தான் இந்த பிரச்சனை உருவாகிறது. Related image இப்பிரச்சனை உள்ளவர்கள் முள்ளங்கி ஜூஸ் தினந்தோறும் இரண்டு வேளை அருந்தி வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

சுவாச கோளாறுகள்

சுவாச பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு முள்ளங்கி ஒரு சிறந்த மருத்துவ பொருளாக அமைகிறது. நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றில் கண்ணனுக்கு தெரியாத நுண்கிருமிகளும், மாசுகளும் அதிகம் இருக்கின்றன. இவை எல்லாம் நாம் சுவாசிக்கும் போது பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. Image result for சுவாச கோளாறுகள் முள்ளங்கி ஜூஸ் அடிக்கடி பருகி வந்தால் நுரையீரலை தூய்மையாக பாதுகாத்து கொள்ளலாம். மேலும், சுவாசிப்பதில் உள்ள பிரச்சனைகளில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

ஞாபக சக்தி

இன்று அதிகமான குழந்தைகளை தாக்கும் பெரிய ஒரு நோய் என்னவென்றால், மறதி நோய் தான். இப்பிரச்சனை உள்ளவர்களுக்கு முள்ளங்கி ஒரு சிறந்த மருந்தாகும்.  வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை முள்ளங்கி ஜூஸ் குடித்து வருவதால் ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்ள முடியும். Related image   மேலும், இது மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும், அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களுக்கு முள்ளங்கி சிறந்த நிவாரணத்தை தருகிறது. மஞ்சள் காமாலை, கல்லீரல், கிருமித்தொற்றால் பாதிப்படையும் போது மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. Image result for மஞ்சள் காமாலை   இந்த மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சிவப்பு அல்லது வெள்ளை நிற முள்ளங்கி ஜூஸ் உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால், இந்த நோயில் இருந்து விடுதலை பெறலாம்.

பூச்சிகடி

Related image நாம் வெளி இடங்களில் வேலை பார்க்கும் போது, அல்லது நமது வீடுகளில் வேலை பார்க்கும் போது, ஏதேனும் பூச்சிகள் கடித்தால், அதன் விஷம் முறிவதற்கு முழங்கி ஜூஸ் போட்டு குடித்து வந்தால், அதன் விஷம் முறிந்து விடும்.
Step2: Place in ads Display sections

unicc