தீன்தயாள் சிலைகளில் இதுதான் உயரமானது.! ரூ.1200 கோடி மதிப்பில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர்.!

  • பிரதமர் மோடி தமது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் இன்று(sunday) ரூ.1200 கோடி மதிப்புடைய 50 புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி தமது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் இன்று(sunday) ரூ.1200 கோடி மதிப்புடைய 50 புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தில் நாட்டின் முதல் தனியார் ரயில் வாரணாசியை, மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன், ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்க புனிதத்தலங்களுடன் இணைக்க உள்ளது. மேலும் 430 படுக்கைகள் கொண்ட உயர்தர வசதிகளுடன் அரசு மருத்துவமனையும், 74 படுக்கைகளைக் கொண்ட இன்னொரு மருத்துவமனையையும் பனாரஸ் இந்து பல்கலைக்கழக அரசு மருத்துவமனை வளாகத்தில் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.

இதைத்தொடர்ந்து மகா காளி என்ற எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைப்பார். இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளரான பண்டிட் தீன்தயாள் உபத்யாயாவின் நினைவிடத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ள நிலையில், அதற்கு 63 அடி உயரம் கொண்ட தீன்தயாள் உபாத்யாயாவின் சிலையை மோடி திறந்து வைக்கிறார். இது கடந்து ஓராண்டுக்கு மேலாக 200க்கும் மேற்பட்ட சிற்பக் கலைஞர்கள் இந்த சிலையினை வடிவமைத்துள்ளனர். மேலும் நாட்டில் உள்ள தீனதயாளன் சிலைகளில் இது தான் உயரமானது என கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்