கை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்

கடந்த 2007 ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ப .சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தார் அப்பொழுது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும்  குற்றச்சாட்டு எழுந்தது .இது குறித்து சிபிஐ மற்றும் அமலாக்குத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

2010 ம் ஆண்டு ப.சிதம்பரம் உள்த்துறை அமைச்சராக இருந்தார் அப்பொழுது குஜராத்தில் நடந்த சோஹ்ராபுதீன் ஷேக் என்கவுண்டர் க்காக அமித்ஷா கைது செய்யப்பட்டார். இப்பொழுது அது தலைகீழாக மாறியுள்ளது பாஜக இரண்டாவது  முறையாக ஆட்சி அமைத்த நிலையில் அமித்ஷா உள்த்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

ப.சிதம்பரம் உள்த்துறை அமைச்சராக இருந்தபொழுது அமித்ஷா சிறையில் அடைக்கப்பட்டதும் தற்பொழுது அமித்ஷா உள்த்துறை அமைச்சராக இருப்பதும் அரசியில் ஒரு முக்கிய புள்ளியாக பார்க்கப்படுகிறது .

author avatar
Dinasuvadu desk