நம்ம விஜய் சார்கிட்ட இருந்து கத்துகிட்ட விஷயம் இதுதான் : நடிகர் ஹரிஷ் கல்யாண்

  • நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • நம்ம விஜய் சார்கிட்ட இருந்து கத்துகிட்ட விஷயம் இதுதான்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், தற்போது, நடிகர் ஹரிஷ் கல்யாண், இஸ்பேட் ராஜாவும், இதய ராணியம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஹரிஷ் கல்யாண், ஒரு பேட்டியில் நடிகர் விஜய் குறித்து கூறியுள்ளார், அவர் கூறியதாவது, “தளபதி விஜய் இன்றைக்கு வேற லெவலில் இருக்கிறார். அதற்க்கு காரணம் அவருடைய கடின முயற்சி மற்றும் நான் தான் பெரிய ஆள் என்ற தன்மை இல்லாமல் உழைப்பதும் தான்.

தளபதி விஜய் தன்னை தானே வளர்த்துக் கொண்டு, மெருகேற்றி கொண்டு இருக்கக் கூடிய அவருடைய அந்த பண்பை எல்லாரும் தளபதி விஜயிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.