நடிகர் அஜித்தின் திரைப்பயணத்தில் இந்த நாள் கொஞ்சம் ஸ்பெஷலான நாளாம்!

நடிகர் அஜித் பல திரைப்படங்களில் நடித்து, ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்வசப்படுத்தியுள்ளார்.

By Fahad | Published: Apr 06 2020 04:11 AM

நடிகர் அஜித் பல திரைப்படங்களில் நடித்து, ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்வசப்படுத்தியுள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்டப்பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அஜித் ராசிகள் ஏதாவது ஒரு விதத்தில், கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அஜித்தின் படங்கள் குறித்த தகவல்கள் வெளிவரவில்லை என்றாலும், இந்த நாளில் இதுவரை அஜித் நடித்த படங்களின் லிஸ்டை ரசிகர்கள் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். இதே நாளில் வெளியிடப்பட்ட தல அஜித்தின் திரைப்படங்களில் தீனா, பரமசிவன், நேசம் தொடரும், ரெட் போன்ற படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.