பிரசவ தழும்புகளை எளிதில் நீக்க இதை செய்தால் போதும்.!

பொதுவாக குழந்தை பெற்ற பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று தான் பிரசவகால தழும்புகள். இது பிரசவத்துக்குப் பிறகு சில பெண்களுக்கு தானாக மறைந்து விடும், சிலருக்கு அந்த தழும்பு நிரந்தரமாகவே காணப்படும்.

இதனால் பெண்கள் அவர்கள் விரும்பிய ஆடைகளை அணிய முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் இப்பிரச்சனையை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே பெண்கள் சரி செய்து கொள்ளலாம்.

கற்றாழையின் ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தடவினால் ஸ்ட்ரெட்ச் மார்க்கின் நிறம் மங்கி சருமம் அழகாகும்.

ஆப்ரிக்காட் பழத்தை வைத்து தழும்பு உள்ள இடத்தில் ஸ்கரப் செய்தால் அது அங்குள்ள சருமத் துளைகளை விரிவடையச் செய்து அதில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பாதிக்கப்பட்ட செல்களை கண்டுபிடித்து அதன் நிறத்தை மங்கச் செய்து பின்னர் படிப்படியாக தழும்புகள் குறைந்துவிடும்.

பிரசவத்திற்கு பின் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுப்பதற்கு கொக்கோ பட்டர் சிறந்ததாக இருக்கும். அதனை கர்ப்பமாக இருக்கும்போதே தடவி மசாஜ் செய்து வந்தால் திசுக்கள் பாதிப்படையாமல் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுக்கலாம்.

author avatar
murugan