திருவள்ளுவர் பல்கலைகழகத்தை 2 ஆக பிரிப்பதற்கு- துரைமுருகன் எதிர்ப்பு.!

இன்று 3-வது நாளாக தமிழக சட்டப்பேரவை தொடங்கி  நடைபெற்று வருகிறது. இதையடுத்து,  110 – விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவரது அறிவிப்பில் , திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதையடுத்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். காட்பாடி தொகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழத்தை கருணாநிதி கொண்டு வந்ததற்காக இவ்வாறு செய்கிறீர்களா..? இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்யுங்கள் என அவர் தெரிவித்தார்.

விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் துவக்கி அதற்கு உங்கள் பெயரை கூட வைத்துக் கொள்ளுங்கள் அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, விழுப்புரத்தில் உருவாக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு என்ன பெயர் வைப்பீர்கள் என துரைமுருகன் கேள்வி எழுப்பினர்.

அதற்கு முதல்வர் பல்கலைக்கழகத்தைப் பிரிப்பதற்கு ஒத்துக் கொள்ளாத நீங்கள் பெயர் வைப்பதற்கு மட்டும் ஒத்துக் கொள்வீர்களா..? பெயர் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

author avatar
murugan