இனிமேல் என் நாவில் இவர்கள் பெயர் வராது! கடுப்பான சேரன்!

நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு மிகவும் வெற்றிகரகமாக நிறைவடைந்துள்ள நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அதிகமாக பேசப்பட்ட போட்டியாளர்கள் லொஸ்லியா மற்றும் கவின். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் பலருக்கு பேசும் பொருளாக மாறியது. இவர்களது காதலுக்கு லொஸ்லியாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பின் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த இவர்கள் இருவரும், சந்தித்துக் கொள்ளாததற்கு காரணம் சேரன் தான் என ட்வீட்டர் பக்கத்தில் ரசிகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கோபம் கொண்ட இயக்குனர் சேரன், கவின் - லொஸ்லியா வாழ்வில் குறுக்கே நிற்க எனக்கு அவசியமில்லை. இன்னொரு முறை என் நாவில் அவர்கள் பெயர் வராது என காட்டமாக தெரிவித்துள்ளார்.