நம்மை வெல்ல யாரும் இல்லை, எவரும் பிறக்கப்போவதும் இல்லை…!மு.க.ஸ்டாலின்

நம்மை வெல்ல யாரும் இல்லை, எவரும் பிறக்கப்போவதும் இல்லை…!மு.க.ஸ்டாலின்

நம்மை வெல்ல யாரும் இல்லை, எவரும் பிறக்கப்போவதும் இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாற்று கட்சியில் இருந்து திமுகவில் இணையும் விழா கரூரில் நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் பேசுகையில் ,மக்கள் கூட்டத்தை காணும்போது, நம்மை வெல்ல யாரும் இல்லை, எவரும் பிறக்கப்போவதும் இல்லை என்ற உணர்வோடு பார்க்கிறேன்.
தாய் தந்தையை விட்டு பிள்ளைகள் பிரியலாம் அவர்கள் மீண்டும் வருவதை பெற்றோர் ஆவலோடு காத்திருப்பார்கள் புதிய இயக்கத்தில் இணைந்ததாக பார்க்கவில்லை. ஏற்கனவே இருந்த கட்சிக்கு வந்திருக்கிறீர்கள்.
4 மாநில தேர்தல்களில் பிரதமர் மோடி எதிர்பார்க்காத திருப்புமுனை ஏற்பட்டுள்ளது மத்தியிலும் மாநிலத்திலும் எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் நடக்கத்தான் போகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *