எந்த கட்சியில் உட்கட்சி பூசல் இல்லை… கமலை சீண்டும் காங்கிரஸ்…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டின் புதிய தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர்  KS.அழகிரி . மேலும் அவர் பலமுறை காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் இணைய வேண்டும்என்று கோரிக்கை வைத்து வந்தார்.

மேலும் அவர் கூறுகையில் கமலஹாசன் மதச்சார்பற்ற கருத்துடையவர் அவருடைய கருத்தும் எங்கள் கூட்டணி கட்சிகளின் கருத்தும் பல்வேறு இடங்களில் இணைந்து போகிறது எனவே  ஒத்த கருத்துடையவர்களை ஒன்றிணைப்பது எங்களுடைய அணியை மேலும் பலமாகும் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து நேற்று  காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியான அறிக்கையில் கமல்ஹாசனுக்கு KS. அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் மகள் திருமணவிழாவில் பங்கேற்ற பொது பத்திரிகையாளரை சந்தித்த அழகிரி , கமல்ஹாசன் மதர்சார்பின்மைக்கு எதிராக பேசியுள்ளார் என்று எந்த கட்சியில் உட்கட்சி பூசல் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment