சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது- முதல்வர் பழனிசாமி.!

  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் பேரணி  நாளை நடைபெற உள்ளது.
  • இந்நிலையில் முதல்வர் பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் ,இஸ்லாமியர்களின் குடியுரிமை பாதிக்கப்படும் என சிலர் தொடர்ந்து வதந்தி பரப்புகின்றனர் என கூறினார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் பேரணி  நாளை நடைபெற உள்ளது.இந்த பேரணி நடத்த கூடாது என சென்னை உயர்நீதி மன்றத்தில் வராகி என்பவர் வழக்கு ஓன்று தொடர்ந்தார்.அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கேட்டு இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பேரணி குறித்து எந்த உத்தரவு பிறப்பிக்கவில்லை.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் , இஸ்லாமியர்களின் குடியுரிமை பாதிக்கப்படும் என சிலர் தொடர்ந்து வதந்தி பரப்புகின்றனர். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் அரணாக அதிமுக அரசு இருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை , பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.

மேலும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டும் என அதிமுக நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி உள்ளது. இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து பிரதமர், உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினேன் என கூறியுள்ளார்.

author avatar
murugan