அரசுக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடையே பிரச்சனை உள்ளது -பொன்.மாணிக்கவேல்

அரசுக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தில்தான்

By Fahad | Published: Apr 01 2020 03:38 PM

அரசுக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தில்தான் பிரச்சனை உள்ளது என்று  பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சிலை கடத்தல் பிரிவு அதிகாரியாக இருந்தவர் பொன்.மாணிக்கவேல் .ஒய்வு பெற்ற இவர் நீதிமன்ற உத்தரவு மூலம் சிலை கடத்தல் பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் பணியில் இருந்த காலத்தில் தமிழக கோவில்களில் காணாமல் போன ஏராளமான சிலைகள் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. சிலைகள் காணாமல் போன வழக்குகள் விசாரணை நடந்து தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட ரூ.30 கோடி மதிப்புள்ள பஞ்சலோக நடராஜர் சிலை ரயிலில் சென்னை வந்தது.அப்பொழுது பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் பேசுகையில்கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம் சிலைக்கடத்தல் வழக்குகளுக்கு தனது குழு மற்றும் ஊடகங்களும் உதவியாக இருந்தன. சிலைகள் கடத்தல் வழக்கில் தமிழக அரசை குறை சொல்ல விரும்பவில்லை .தமிழக அரசுக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தில்தான் பிரச்சனை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

More News From Ponn Manickavel