"நித்தியானந்தாவை கண்டுபிடிப்பதில் சட்ட சிக்கல்கள் உள்ளன"- கர்நாடக காவல்துறை

  • நித்யானந்தாவை கண்டுபிடிப்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளதாக கர்நாடக காவல்

By Fahad | Published: Apr 06 2020 05:29 AM

  • நித்யானந்தாவை கண்டுபிடிப்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளதாக கர்நாடக காவல் துறையினர் தெரிவித்தனர்.
  • மேலும் அவரை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருவதாகவும் கூறினார்கள்.
பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தேடப்பட்டுவருபவர், நித்தியானந்தா. இவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த கோரி கர்நாடக காவல்துறைக்கு அம்மாநில  நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதற்கான தேதி 18 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து நித்யானந்தாவை கண்டுபிடிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே சிபிஐ மற்றும் இன்டர்போலின் உதவியை நாடி இருப்பதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் அவரை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருவதாகவும் கூறினார்கள். அவர் மீது உள்ள நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதால், அதுகுறித்த தகவல்களை தெரிவிக்க முடியாது எனவும் மறுப்பு தெரிவித்தனர்.

Related Posts