தேனி மாவட்டம் குரங்கணியில் வனத்தீ ஏற்பட்டது குறித்து ஐ.எஃப்.எஸ். அதிகாரி ஆய்வு!

ஐ.எஃப்.எஸ். அதிகாரி முருகானந்தம் தேனி மாவட்டம் குரங்கணியில் வனத்தீ ஏற்பட்டது குறித்து  ஆய்வு நடத்தினார்.

மத்திய அரசின் சார்பில் டெல்லியில் இருந்து குரங்கணி வந்த வனத்துறை உதவி ஐ.ஜி. முருகானந்தம், குரங்கணி உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரனுடன் ஆய்வு மேற்கொண்டார். தீவிபத்துக்கான காரணம், டிரெக்கிங் வசதி உள்ளதா? எப்படி அனுமதி வழங்கப்படுகிறது? என்பது தொடர்பாக ஆய்வு நடைபெற்றது.

அப்போது மழை பெய்ய தொடங்கியதால் ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தீவிபத்து ஏற்பட்ட காரணத்தால் மே மாதம் வரை டிரெக்கிங் செல்ல தடை விதிப்பதாக அவர் தெரிவித்தார். சினிமா படப்பிடிப்புகள் நடத்தவும் தடை விதிப்பதாக முருகானந்தம் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment