எட்டு திரைபிரபலங்கள் வெளியிடும் ‘8’ படத்தின் முதல் பார்வை

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி இன்னும் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பெற போராடி கொண்டிருக்கும் ஹீரோ பரத். இவர் நடிப்ப்பில் அடுத்ததாக காளிதாஸ் என்ற படம் ரெடியாகி வருகிறது.

இதனை தொடர்ந்து பரத்தும், காமெடி நடிகர் சூரியும் இணைந்து நடிக்கும் திரைப்பபடம் ‘8’ (எட்டு) இப்படத்தை விஜய் கவிராஜ் என்பவர் இயக்கி வருகிறார். ஹீரோயினாக பூஜா ஜவேரி என்பவர் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார்.ஜான் பீட்டர் இசைய. செவிலோராஜா ஒளிப்பதிவு செய்கிறார், சந்திரகுமார் எடிட்டிங் செய்கிறார்.

இப்படத்தின் முதல் பார்வையை எட்டு திரைபிரபலங்கள் வெளியிட்டு உள்ளனர். அவர்கள், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் ஆர்யா, நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், இசையமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் சுகுமார், பாடலாசிரியர் மதன் கார்க்கி, எடிட்டர் பிரவீன்.கே.எல் ஆகியோர் ஆவர்.

மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment