ரஜினியை நீங்கள் யாரு என கேட்ட வாலிபர்! தற்போது அவருடைய நிலை!

ரஜினியை கிண்டல் செய்த வாலிபர் சந்தோஷ் கைது.  கடந்த சில வருடங்களுக்கு

By Fahad | Published: Apr 02 2020 12:19 PM

ரஜினியை கிண்டல் செய்த வாலிபர் சந்தோஷ் கைது.  கடந்த சில வருடங்களுக்கு முன்பதாக தூத்துக்குடியில், நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தில், பல இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், சந்தோஷ் என்ற கல்லூரி இளைஞர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுடப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, பல தலைவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு படுகாயமடைந்தவர்களை விசாரித்து வந்தனர். இதில் ரஜினி, சந்தோஷ் என்ற இளைஞனை நலம் விசாரித்த போது, அவர் ரஜினியை பார்த்து நீங்க யாரு? என கேள்வி எழுப்பினார். இந்நிலையில், இந்த போராட்டம் நடந்து பல நாட்கள் ஆகியுள்ள நிலையில், இளைஞன் சந்தோஷ் பைக் திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.