சீனர்கள் கண்டுபிடித்த "பறக்கும் காசு" என அழைக்கப்பட்ட உலகின் முதல் ரூபாய் தாள்...!!

சீனர்கள் கண்டுபிடித்த "பறக்கும் காசு" என அழைக்கப்பட்ட நாணயத் தாள். கடதாசியில்

By Dinasuvadu desk | Published: Mar 18, 2018 11:20 PM

சீனர்கள் கண்டுபிடித்த "பறக்கும் காசு" என அழைக்கப்பட்ட நாணயத் தாள். கடதாசியில் அச்சிடப் பட்ட நாணயத் தாள்கள், பண்டைய மொங்கோலிய சாம்ராஜ்யத்தில் புழக்கத்தில் விடப் பட்டிருந்தது. அப்போது சீனாவை ஆண்ட மொங்கோலிய கான் சக்கரவர்த்தியின் அரசுப் பிரதிநிதிகள், இந்த நாணயத் தாளை அச்சிட்டு கையொப்பமிட்டு கொடுத்தனர். அதில் கான் சக்கரவர்த்தியின் முத்திரை பொறிக்கப் பட்டிருந்தது. அதன் பிறகு அந்த நாணயத் தால் சாம்ராஜ்யத்தின் எந்த மூலையிலும் செல்லுபடியானது. அந்த நாணயத் தாள் கொடுத்து எந்தப் பொருளும் வாங்க முடிந்தது. விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களான முத்துக்கள், நவரத்தினக் கற்கள் கூட வாங்கலாம். எல்லா வணிகர்களும் நாணயத் தாள்கள் வைத்திருந்தனர்.
அதே நேரம், 17 ம் நூற்றாண்டு வரையில், ஐரோப்பாவில் நாணயத்தாள் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. அப்போதெல்லாம் ஐரோப்பியர்கள் தங்க, வெள்ளி நாணயக் குற்றிகளை காவிக் கொண்டு திரிந்தனர்.
Step2: Place in ads Display sections

unicc