இறந்த உடல்களுடன் இரண்டு மாதம் வாழ்ந்த பெண்..!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி ஆதர்ஷ் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து

By murugan | Published: Nov 08, 2019 01:44 PM

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி ஆதர்ஷ் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அங்கு இருந்தவர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் வீட்டை திறந்து பார்த்த போது தீபா என்பவர் உயிரிழந்த தனது  தாய்  மற்றும் சகோதரி ஆகிய இருவரின் உடல்களுடன் வசித்து வந்தது தெரிய வந்தது. தீபாவின் தந்தை 1990-ம் ஆண்டு இறந்து உள்ளார்.பின்னர் தீபா தன் தாய் மற்றும் இரண்டு சகோதரியுடன் வசித்து வந்தார். ஒரு வருடத்திற்கு முன் ஒரு சகோதரி இறந்துவிட்டார். இதனால் தீபா தாயார் மற்றும் சகோதரி உடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் மன ரீதியாக இவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறினர். இரண்டு மாதங்களுக்கு முன்பு  தீபாவின் தாய் மற்றும் சகோதரி இறந்து விட்டனர். ஆனாலும் தீபா அவர்களின் சடலங்களுடன் வசித்து வந்துள்ளார். தீபாவின் தாய் மற்றும் சகோதரி உடலின் எலும்புகள் தெரியும் அளவிற்கு  உடல்  சிதைந்த நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டதாக  காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தீபாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர மருத்துவ சிகிக்சை கொடுக்கப்பட்டு வருவதாக போலீசார் கூறினர்.
Step2: Place in ads Display sections

unicc