இஸ்லாமிய டிரைவராக என்பதால் முன்பதிவை ரத்து செய்த பெண்..!

பெங்களூரில் ஒரு பெண் நேற்று முன்தினம் ஊபர் காரை முன்பதிவு செய்துள்ளார். ஆனால் அப்பெண் முன் பதிவு செய்த காரில் வந்த  டிரைவர் இஸ்லாமியராக இருந்ததால் முன்பதிவைரத்து செய்து விட்டார்.இது குறித்து அப்பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார்.அதில் “நான் முன் பதிவு செய்த காரில் வந்த  டிரைவர் இஸ்லாமியராக இருந்ததால் ரத்து செய்து விட்டேன்” என பதிவிட்டு இருந்தார்.


இதற்கு பதிலளித்த ஊபர் நிறுவனம்”இந்த பிரச்சனை சரி செய்கிறோம். உங்களுடைய ஊபர் கணக்கின் தொலைபேசி எண்ணை எங்களுக்கு அனுப்புங்கள். இது தொடர்பாக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்” என தெரிவித்துள்ளது.

author avatar
murugan