பிரச்சனை குறித்து விசாரிக்க சென்ற காவல்துறையினரின் காலை கடித்து குதறிய பெண்மணி!வைரலாகும் வீடியோ!

பிரச்சனை குறித்து விசாரிக்க சென்ற காவல்துறையினரின் காலை கடித்து குதறிய பெண்மணி!வைரலாகும் வீடியோ!

  • குடும்ப தகராறு காரணமாக விசாரணை நடத்த சென்ற காவல்துறையினரை மது போதையில் தாக்கியது மட்டுமில்லாமல் காலை கடித்து குதறிய பெண்மணி.
  • இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடாவில் தனது கணவனுடன் 38 வயதுடைய பெண் சண்டையிட்டு அடிதடியில் இறங்கியதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.தகவலின் அடிப்படையில் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டில் இருந்த பெண் செரி சாண்டர்ஸீடம் கணவனை தாக்கியது குறித்து விசாரிக்க சென்றுள்ளனர்.அப்போது போதையில் இருந்த அந்த பெண் காவல்துறையினரை மிரட்டியதுடன் கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவருக்கு கைவிலங்கு போட முயற்சி செய்துள்ளனர்.அப்போது அந்த பெண்மணி அவர்களை காலால் உதைத்துடன் சத்தம் போடவும் தொடங்கியுள்ளார். பின்னர் அவரை பிடித்த காவல்துறையினர் கைவிலங்கிட முயற்சி செய்யும் போது அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவரின் காலை கடுமையாக கடித்து குதறியுள்ளார்.அந்த பெண்ணிடம் சிக்கிய காவல்துறையினரின் காலை மற்ற காவல்துறையினர் கஷ்டப்பட்டு மீட்டுள்ளனர். இந்நிலையில் அந்த காவல்துறையினரின் காலில் சுமார் 2 இன்ஜி ஆழத்திற்கு பல் பதிந்துள்ளது.அவர் சிறுது நேரத்தில் மயங்கி கீழே விழ சக காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு அளைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த பெண் மீது குடும்ப தகராருடன் காவல்துறையினரை தாக்கியது மற்றும் கைது செய்ய வந்த காவல்துறையினரை தாக்கி கடித்தது போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Latest Posts

மின்தடையால் திருப்பூர் மருத்துவமனையில் பறிபோன உயிர் - ஆட்சியர் விளக்கம்!
போக்குவரத்து விதி மீறல்களுக்கு இ-செல்லான் முறை கேரளாவில் தொடக்கம்.!
#IPL2020:ஆல்ரவுண்டர் மிட்செல்-மார்ஷ்க்கு காயம்! விளையாடுவது சந்தேகம்!!
#IPL2020:வாய்ப்பு கிடைத்தால் ரஸ்செல்லுக்கு தோள்கொடுக்க ஆசை!மோர்கன் மாஸ்!
வானில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அபியாஸ் ஏவுகனை சோதனை வெற்றி...
அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
பெண்களிடம் திருமணமானதை மறைத்து மனம் முடிப்பவர்களுக்கு கடும் தண்டனை!
மாற்றமில்லா விலையில் இன்றைய நிலவரம் இதோ
ஹிந்தி தெரியாதா?... நோ லோன்... ஓய்வுபெற்ற மருத்துவரை அவமதித்த வங்கி மேலாளர்...
#IPL2020:ராஜஸ்தானிடன் சறுக்கியது ஏன்??தோனி விளக்கம்