வெஸ்ட் இண்டீஸ் அணியில் 140 கிலோவில் களமிறங்கும் மலை மனித வீரர் !

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 டி20 , 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட்

By murugan | Published: Aug 11, 2019 08:45 AM

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 டி20 , 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. Image result for Rahkeem Cornwall இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.இந்நிலையில் ஒருநாள் போட்டி முடித்த பிறகு 22-ம் தேதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் புதியதாக ஒரு வீரர் களமிறங்க உள்ளார்.அவர் பெயர் ராஹீம் காரன்வால், இவர் உயரம் 6.6 அடியும் , 140 கிலோ எடைகொண்டவர்.இவர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக எடை கொண்ட வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். Image result for Rahkeem Cornwall இதுவரை 55 போட்டிகளில் விளையாடி 2224 ரன்கள் குவித்துள்ளார். அத்துடன் 260 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். மேலும் 2017 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடந்த டூர் போட்டியில் விளையாடி இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான  விராட் கோலி , புஜாரா , ரஹானே ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார். மீண்டும்  இந்திய அணியுடன் விளையாட உள்ளதால் பெரும் சவாலாக அமையும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc