மேட்டூர் அணை நீர்மட்டம் 26½ அடி ஆக குறைந்தது.!

மேட்டூர் அணை நீர்மட்டம் : 72.420 அடி நீர்இருப்பு : 34.815 டி.எம்.சி. நீர்வரத்துவினாடிக்கு 201 கன அடியாக உள்ளது நீர் வெளியேற்றம் காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கடந்த மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்ததால் குறைய தொடங்கியது.

நேற்று 73.62 அடியாக குறைந்தது அதாவது ஒரே மாதத்தில் அணை நீர்மட்டம் சுமார் 26½ அடி குறைந்துள்ளது. நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 199 கனஅடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.