உச்சநீதிமன்றம் தீர்ப்பு மொழி பெயர்க்கப்பட்டு தமிழில் வெளியானது!

உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தீர்ப்புகள் இந்தி ,ஒடிசா ,அசாமி ,தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் மொழி மாற்றம் செய்து உச்சநீதிமன்ற இணைத்தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்து.இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தீர்ப்புகளை மொழி மாற்றம் செய்யும்  மொழிகளில் தமிழ் மொழி இல்லாததால் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புகள் கிளப்பின.

அறிவித்த படி பிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்புகளை வெளியிட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்ற கூடுதல் கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் நகலை வெளியிட்டார்.

இந்த விழாவில் பேசிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உச்சநீதி மன்றம் மற்றும் உயர்நீதி தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் முதல் முறையாக தமிழில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியாகியது.ஹோட்டல் சரவணபவன் ராஜகோபால் வழக்கு சமந்தமான உச்சநீதிமன்றம் தீர்ப்பு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan