தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது -மு.க.ஸ்டாலின்

9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த

By venu | Published: Dec 07, 2019 08:25 AM

  • 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலி தெரிவித்துள்ளார். 
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் வருகின்ற 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இது தொடர்பாக உச்ச்சநீதிமன்றத்தில் திமுக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது .அதில்  புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது, அதை திமுக வரவேற்கிறது.உள்ளாட்சி தேர்தலில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு திமுக கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி . உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று அரசு முறையாக தேர்தலை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
Step2: Place in ads Display sections

unicc