இன்றைய போட்டியில் இரு அணி கேப்டன்களும் சாதனை படைப்பார்களா !

இன்றைய இறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியும் ,இங்கிலாந்து அணியும் மோத உள்ளது. இப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்த இரு அணிகளும் உலகக் கோப்பை தொடரில்  ஒருமுறை கூட கோப்பையை வென்றது இல்லை.

இந்நிலையில் இன்றைய போட்டியில் கேன் வில்லியம்சன் ஒரு ரன்கள் எடுத்தால் ஜெயவர்த்தனே சாதனையை முறியடித்து விடுவார். ஜெயவர்த்தனே 2007-ம் ஆண்டு உலககோப்பையில் 548 ரன்கள் குவித்து இருந்தார்.

நடப்பு உலகக்கோப்பையில் கேன் வில்லியம்சன் 548 ரன்கள் அடித்து உள்ளார்.இன்றைய போட்டியில் ஒரு ரன்கள் எடுத்தால் ஜெயவர்த்தனே சாதனையை கேன் வில்லியம்சன் முறியடித்து விடுவார்.

மேலும் கெய்ல் 2015 -ம் ஆண்டு உலககோப்பையில்  26 சிக்ஸர் விளாசினார். நடப்பு உலகக் கோப்பையில்  இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் 22 சிக்ஸர் விளாசி உள்ளார். இன்றைய போட்டியில்  ஐந்து சிக்ஸர் மோர்கன் அடித்ததால் கெய்ல் சாதனையை முறியடித்து விடுவார்.

 

 

author avatar
murugan