திருமணமான முதல் நாளில் மணமகளுக்கு தெரியவந்த உண்மை!பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த அதிமுக பிரமுகர்!

திருமணமான முதல் நாளில் மணமகளுக்கு தெரியவந்த உண்மை!பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த அதிமுக பிரமுகர்!

  • திருமணமான முதல் நாளில் மணப்பெண்ணுக்கு தெரியவந்த உண்மை.பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த அதிமுக பிரமுகர்.
  • சகித்து கொள்ள முடியாமல் எஸ்பி அலுவலகத்தில் கோரிக்கை விடுத்த பெண்.

திருவனந்தபுரத்தில் உள்ள பாலராமபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் ஆவார்.இவரது மக்கள் ஆனிலதா ஆவார்.இவர் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலின் வட சேரி பகுதியில் தனது அத்தை வீட்டில் வசித்து வருகிறார்.

இவர் கடந்த 2013-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள சுசீந்திரம் அக்கறை பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர் தனது உடல்நிலை சரியில்லாத அத்தையை பார்க்க நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு வந்த போது பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறி அதிமுக நிர்வாகியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவர் திருமணத்திற்கு முன்பு ஆனிலதாவிடம் மீன் குத்தகைக்காகவும் டாஸ் மார்க்கை ஏலம் எடுப்பதற்காகவும் பணத்தையும் நகைகளையும் வாங்கியுள்ளார்.திருமணம் ஆன முதல் நாளில் அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனிலதா அவரிடம் கேட்டுள்ளார்.அதற்கு ஆத்திரம் அடைந்த கணவர் அவரை கடுமையாக அடித்து உதைத்துள்ளார்.ஆனாலும் ஆனிலதா கணவருடன் சகித்து கொண்டு வாழ தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை வட்டத்தில் உள்ள பூதபாண்டி பகுதியை சேர்ந்த பெண்ணுடன் ஏற்கனவே திருமணம் நடைபெற்று கருக்கலைப்பு வரை சென்றது ஆனிலதாவிற்கு தெரியவந்துள்ளது.

இது குறித்து அவர் கணவரின் பெற்றோரிடம் கேட்டுள்ளார்.அதற்கு அவர்கள் ஏற்கனவே உனக்கு தெரியும் என நாங்கள் நினைத்தோம் என்று தெனாவட்டாக பதிலளித்துள்ளனர்.மேலும் அவரின் கணவருக்கு பல பெண்களிடம் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.இதில் ஆனிலதாவை கணவர் தாக்கியதில் கைமுறிவு ஏற்பட்டுள்ளது.தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தற்போது அவரது கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கிடைத்துள்ளது.

இதன் காரணமாக காவல்துறையினர் அவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆனிலதா எஸ்பி அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube