கடலில் சிக்கிய நபர் 28 நாள்கள் கழித்து உயிருடன் கரை ஒதுங்கினார்..!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஷாஹித் ட்வீப்பில் வசிக்கும் அம்ரித் குஜூர் மளிகைப் பொருட்கள் , குடிநீர் போன்ற பொருட்களுடன் வணிகத்திற்காக கப்பல்களை அனுப்பும் தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி  குஜூரும் அவர் நண்பர் திவ்யராஞ்சனும் இந்தியப் பெருங்கடலில் கப்பல்களுடன் வர்த்தகம் செய்ய புறப்பட்டனர்.
அப்போது கடலில் எற்பட்ட புயல் காரணமாக அவர்கள் சென்ற படகு கடல் வழியிலிருந்து விலகியது. 28 நாட்களாகியும் இருவரும் கரைக்கு திரும்பவில்லைஎன்பதால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை குஜூர் நீந்தி கரை வந்து சேர்ந்தார். மிக மோசமான நிலையில் மீட்கப்பட்ட குஜூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் தனது நண்பன் திவ்யராஞ்சன் உணவு இல்லாமல் 28 நாட்களாக கடல் நீரை குடித்ததால் உயிரிழந்ததாக குஜூர் கூறியுள்ளார்.

author avatar
murugan