மகாராஷ்டிராவில் பல திருப்பங்களுக்கு பிறகு புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா தொடங்கியது..!

மகாராஷ்டிராவில் பல திருப்பங்களுக்கு பிறகு புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா தொடங்கியது..!

மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை காலை  தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும் ,அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.இதை தொடர்ந்து காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ,சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது.
இதை அடுத்து அஜித் பவார் துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா அறிவித்து ஆளுநரிடம்  தனது  ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
இந்நிலையில் நேற்று மாலை இடைக்கால சபாநாயகராக  காளிதாஸ் கொலம்ப்கர் தேர்வு செய்ய செய்யப்பட்டு பதவியேற்ற நிலையில் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்று வருகின்றனர். புதிய எம்எல்ஏக்களுக்கு இடைக்கால சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட காளிதாஸ் கொலம்ப்கர் பதவி பிரமாணம் செய்து வருகிறார்.
கடந்த மாதம் 21-ம் தேதி 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலுக்கான முடிவு கடந்த மாதம் 24-ம் தேதி வெளியானது.இதில் பாஜக 105 , சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54 மற்றும் காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் முடிந்த நிலையில் பல திருப்பங்களுக்கு பிறகு மகாராஷ்டிராவில் இன்று வெற்றிபெற்ற புதிய எம்எல்ஏக்கள் அனைவரும் பதவியேற்று வருகின்றனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube