வெயில் காலம் தொடங்கியாச்சி! ஒற்றை தலைவலியால் அவதிப்படும் உங்களுக்கு இதோ சூப்பர் டிப்ஸ்!

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவோருக்கு சூப்பர் டிப்ஸ்.

இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தலைவலி என்று கூறுவதுண்டு. அதிலும் சிலருக்கு ஒற்றைத்தலைவலி இருப்பது வழக்கம். அந்த வகையில், வெயில் காலங்களில் இது அதிகமாக ஏற்படுவதுண்டு. தற்போது இந்த பதிவில், இந்த தலைவலியில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் எனபது பற்றி பார்ப்போம்.

தண்ணீர்

நாம் அனைவரும் ஒரு நாளைக்கு மூன்றரை லீட்டர் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். நமது உடலில் நீர்சத்து குறையும் பட்சத்தில், தலை சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கூலிங் கிளாஸ்

வெயில் காலங்களில் நாம்  வெளியில் செல்லும் போது, கண்களுக்கு கூலிங் கிளாஸ்  அணிவதை வழக்கமாக கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது, நாம் நம்மை புறஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

செல்போன்,  மடிக்கணினி

நாம் அதிகாமாக செல்போன், மடிக்கணினி உபயோகிப்பதுண்டு. இந்த தலைவலி பிரச்சனை உள்ளவர்கள். நீண்ட இவைகளை உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.