தூத்துக்குடியில் பாஜகவின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது-தமிழிசை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  பொய் சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார் என்று

By Fahad | Published: Apr 08 2020 07:58 AM

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  பொய் சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறுகையில்,வேலூர் மக்களவை தொகுதி தேர்தலையே நடத்த முடியாதபோது திமுக பொருளாளர் துரைமுருகன் எப்படி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார். மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  பொய் சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார். மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது. தூத்துக்குடியில் பாஜகவின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது . கடலிலும் தாமரை மலர்ந்தே தீரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.