இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம்! வாபஸ் பெறப்படுகிறது-ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம்! வாபஸ் பெறப்படுகிறது-ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ஆம் தேதி நடைபெற இருந்த திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் வாபஸ் பெறப்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்துக்கு  தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இந்த கருத்தை  எதிர்த்து செப்டம்பர் 20 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்தது.

இந்த நிலையில் இன்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்தார்.இதனை அடுத்து அழைப்பை ஏற்று இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார்  மு.க.ஸ்டாலின்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ஆம் தேதி நடைபெற இருந்த திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் வாபஸ் பெறப்படுகிறது .ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் விளக்கத்தை ஏற்று போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது . இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் குறித்து ஆளுநரிடம் விளக்கினோம்.மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, இந்தி திணிக்கப்படாது என ஆளுநர் பன்வாரிலால் கூறினார்.மேலும் இந்தி திணிப்பை என்றுமே நாங்கள் எதிர்ப்போம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

Join our channel google news Youtube