முதல்முறையாக குட்டி சினேகாவை ரசிகர்களுக்கு காண்பித்த புன்னகை அரசி.!வைரல் வீடியோ உள்ளே .!

முதல்முறையாக குட்டி சினேகாவை ரசிகர்களுக்கு காண்பித்த புன்னகை அரசி.!வைரல் வீடியோ உள்ளே .!

  • sneha |
  • Edited by ragi |
  • 2020-08-01 12:13:41
நடிகை சினேகா தனது மகளை ஒர்க்கவுட் வீடியோ மூலம் ரசிகர்களுக்கு காண்பித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

கோலிவுட் சினிமாவின் பிரபல காதல் ஜோடியாக வலம் வருபவர் தான் சினேகா மற்றும் பிரசன்னா தம்பதி. புன்னகை அரசி சினேகா கடைசியாக தனுஷின் பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். மேலும் பிரசன்னா மாபியா படத்திலும் நடித்து வரவேற்பைப் பெற்றார். இவர்களுக்கு விகான் என்ற மகன் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் தான் சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. அதனை பிரசன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'தாய் மகள் பிறந்தாள்' என்ற கேப்ஷனுடன் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் குழந்தை பிறந்து இரண்டு மாதங்களுக்கு பின், சினேகா ஒர்க்கவுட் செய்யும் வீடியோவில், அத்யந்தா என்று பெயரிடப்பட்டுள்ள அவரது குழந்தையும் காண்பித்துள்ளார். படுக்கையில் படுத்து கொண்டு தனது குட்டி கால்களை வைத்து விளையாடும் குட்டி சினேகாவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 
]]>