மன்னார் குடி ராஜகோபாலசாமி கோவிலில் ராஜ அலங்கார சேவை உற்சவம்

  • திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜ கோபாலசாமி கோவில் அமைந்து உள்ளது.
  • இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவம் 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடை பெறுவது வழக்கம். பிரம்மோற்சவத்தை தொடர்ந்து 12 நாட்கள் விடையாற்றி உற்சவம் நடைபெறும்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜ கோபாலசாமி கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் மூலவராக பரவாசுதேவ பெருமாளும், உற்சவராக ருக்மணி, சத்யபாமாவுடன் ராஜகோபால சாமியும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். தாயார் சன்னதியில் மூலவராக செண்பகலட்சுமி தாயாரும், உற்சவராக செங்கமலத்தாயாரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவம் 18 நாட்கள் வெகுவிமர்சையாக நடை பெறுவது வழக்கம். பிரம்மோற்சவத்தை தொடர்ந்து 12 நாட்கள் விடையாற்றி உற்சவம் நடைபெறும்.

ஆகவே பங்குனி மாதம் முழுவதும் ராஜகோபாலசாமி கோவில் விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த ஆண்டுக்கான பங்குனி பிரம்மோற்சவம் கடந்த திங்கள்கிழமை கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ராஜகோபாலசாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து நேற்று வெள்ளிஹம்ச வாகனத்தில் ராஜ அலங்கார சேவையில் ராஜகோபாலசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பலித்தார்.

Leave a Comment