இன்று வெளியாகிறது தேர்தல் முடிவுகள் !எப்போது தேர்தல் முடிவு வெளியிடப்படும் ?தகவல் இதோ ..

இன்று வெளியாகிறது தேர்தல் முடிவுகள் !எப்போது தேர்தல் முடிவு வெளியிடப்படும் ?தகவல் இதோ ..

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .ஆனால் வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.இந்த தேர்தலில் மொத்தம் 8,039 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.மேலும் பாஜக 435 தொகுதிகளிலும், காங்கிரஸ் 420 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளது.

மற்ற தொகுதிகளில் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. பாஜகவும், காங்கிரஸும் நேரடியாக 273 தொகுதிகளில் மோதியது.

இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும்  மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை, மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பான செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் …

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *