ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை- ரிசர்வ் வங்கி அறிவிப்பு

குறுகிய கால கடன்களுக்கான 5.15% என்ற ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

கடந்த 1-ஆம் தேதி 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மும்பையில் ரிசர்வ் வங்கியின்  நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம்  3 நாட்கள் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ,குறுகிய கால கடன்களுக்கான 5.15% என்ற ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம்,பொருளாதார தேக்க நிலை காரணமாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவித்த  ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

author avatar
Castro Murugan