எரிபொருள் உயர்வை கண்டித்து பிரான்ஸில் மஞ்சள் சட்டை போராட்டத்தை தொடங்கிய போராட்ட காரர்கள் !

எரிபொருள் உயர்வை கண்டித்து பிரான்ஸில் மஞ்சள் சட்டை போராட்டத்தை தொடங்கிய போராட்ட காரர்கள் !

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் தலை நகர் பாரிஸில் போராட்ட காரர்கள் மஞ்சள் சட்டை அணிந்து மீண்டும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சில வாரங்களாக ஓய்ந்திருந்த  இந்த போராட்டம் தற்போது மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

தலை நகர் பாரிஸில் நடந்த போராட்டத்தை கலைக்க  போலீசார் கண்ணீர் குண்டு வீசி வருகிறாரகள். அரசுக்கும் அதிபருக்கும் எதிரானதாக மாறிய இந்த போராட்டம் தற்போது வன்முறையில் முடிந்துள்ளது. போலீசார் கண்ணீர் குண்டுகளை வீசியதால் ஆத்திரமடைந்த போராட்ட காரர்கள் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி தீயை வைத்தனர். மேலும் இந்த போராட்டகாரர்கள் அரசு அலுவலகம் செல்லவிருந்த 7 ஆயிரம் பேர்களை தடுத்தி நிறுத்தினார்கள்.

மேலும் இந்த போராட்டத்தில் 153 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ,300 பேருக்கு அபராதம் விதிக்க பட்டுருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளார்கள்.

 

 

 

 

 

Join our channel google news Youtube