தேனியில் பரபரப்பு!கோவையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு வருகை !

கோவையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனிக்கு மாற்றியதாக திமுக கூட்டணி

By venu | Published: May 07, 2019 09:29 PM

கோவையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனிக்கு மாற்றியதாக திமுக கூட்டணி கட்சிகள் புகார் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில்  வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் அதிகாரி நுழைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதன் பின் பெண் அதிகாரி மற்றும்  அவருக்கு உதவியதாக 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ,மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜனை மாற்ற உத்தரவு பிறப்பித்தது.இதனைத் தொடர்ந்து  உதவி தேர்தல் அதிகாரி, உதவி ஆணையரையும் மாற்ற நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இன்று கோவையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனிக்கு மாற்றியதாக திமுக கூட்டணி கட்சிகள் புகார் தெரிவித்துள்ளது .தேனி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc