கடுப்பான காதலன் செய்த செயல்!கைது செய்த காவல்துறையினர்!

  • காதலி தன்னை விட்டு விலகுவதை உணர்ந்த காதலன் செய்த செயல்.
  • பாதிக்கப்பட்ட

By Fahad | Published: Apr 02 2020 08:08 PM

  • காதலி தன்னை விட்டு விலகுவதை உணர்ந்த காதலன் செய்த செயல்.
  • பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் காதலனை கைது செய்துள்ளனர்.
கோவையில் உள்ள சிங்கா நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரூபன் ஆவார்.இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில் அந்த பெண் ரூபனின் நடவடிக்கை பிடிக்காமல் அவரை விட்டு விளகியுள்ளார். இந்நிலையில் காதலி தன்னை விட்டு விலகுவதை ஏற்கமறுக்காத ரூபன் அவரை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.இதன் காரணமாக காதலி தன்னுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். ஆனால் ரூபனின் மிரட்டலை அந்த பெண் கண்டுகொள்ளவில்லை.இதை உணர்ந்த ரூபன் அந்த பெண்ணின் தங்கைக்கு தொல்லை கொடுத்துள்ளார்.இதுமட்டுமில்லாமல் அந்த பெண்ணிற்கு ஆபாச செய்திகளை அனுப்பியுள்ளார். பின்னர் ஆபாச படங்களிலும் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனை தொடர்ந்து இந்த தகவல் அந்த பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரியவந்துள்ளது.இதன் காரணமாக அந்த பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரூபனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

More News From காதலிக்கு மிரட்டல்