புதுச்சேரியில் இன்று முதல் கடைகள் திறப்பு நேரம் மாற்றம்.!

புதுச்சேரி பேரிடா் மேலாண்மை ஆணையம் சாா்பில் கொரோனா கட்டுப்படுத்துவது ஆலோசனைக் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த  கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலர் மற்றும் பல்வேறு துறை செயலர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் பேசிய முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு சென்னை,வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருவோர்தான். இதனால், எல்லைகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா  பரவி வரும் நிலையில் முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றினால் ஏற்கெனவே ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. இனி ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இன்று முதல் 10 நாட்களுக்கு கடைகள் காலை 6 மணி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும். பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்கும். மதுக்கடைகள் 2 மணிக்குள் மூட வேண்டும்.

கடற்கரை சாலையும் 10 நாட்களுக்கு மூடப்படும். இந்த உத்தரவுகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தொழிற்சாலைகள் இயங்கும், தொழிலாளிகளுக்கு அனுமதி பாஸ் வழங்கப்படும் என நாராயணசாமி தெரிவித்தார்.

author avatar
murugan