ஆக்சிஜனை சுவாசித்து ஆக்சிஜனை வெளியிடும் ஒரே விலங்கு பசு- உத்தரகண்ட் முதல்வர் தடாலடி !

உத்தரகண்ட் மாநில பாஜக தலைவராகவும் , நைனிடால் தொகுதிக்கு எம் .பியாகவும் இருப்பவர்

By murugan | Published: Jul 27, 2019 02:28 PM

உத்தரகண்ட் மாநில பாஜக தலைவராகவும் , நைனிடால் தொகுதிக்கு எம் .பியாகவும் இருப்பவர் அஜய்பாத்.இவர் சமீபத்தில் கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவமாக வேண்டும் என்றால் கருட கங்கா நதியின் தண்ணீரை குடிக்க வேண்டும் என கூறி இருந்தார். இந்நிலையில் உத்தரகண்ட்  முதல்வர் திரிவேந்திரசிங் ரவாத் , பசுவின் பால் கோமியத்தை பற்றி பேசினார்.அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில், "பசுவை தடவி கொடுத்தால் சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் குணமடைவார்கள் என கூறினார்.பசு மாட்டு கொட்டகை அருகில் வாழ்ந்து வந்தால் காச நோய் தீரும்.ஆக்சிஜனை சுவாசித்து ஆக்சிஜனை வெளியிடும் ஒரே விலங்கு பசு என கூறினார். மனிதர்கள் மற்றும் விலங்குகள் ஆக்சிஜனை சுவாசித்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடும் நிலையில் முதல்வரின் இந்த  பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc