இன்று மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை

இன்று மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில்

By venu | Published: Oct 24, 2019 07:24 AM

இன்று மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் 288 சட்டமன்றத் தொகுதிகளிலும்  ஹரியானாவில்  90 சட்டமன்றத் தொகுதிகளிலும்  இரண்டு மாநிலங்களிலும் கடந்த 21-ஆம் தேதி வாக்குப்பதிவு  நடைபெற்றது. மகாராஷ்டிராவில் 60.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதே போல்,   ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் 68.47% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இருமாநிலங்களிலும் செய்யப்பட்டுள்ளது.மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.வாக்கு எண்ணிக்கையின் நிலவரம் காலை 10 மணி முதல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc