கூகுளில் டேட்டிங் பற்றி தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கூகுள் நிறுவனம்!

இன்றைய நவீனமயமான உலகில் அனைவருமே இணையதளத்திற்கு அடிமையாகியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்று அனைவருடைய கைகளிலுமே ஆன்ராய்டு போன்கள் தவழுக்கிறது.

இந்நிலையில், கூகுள் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடும் விஷயங்களில் மேட்ரிமோனியை விட, டேட்டிங்குக்கே அதிகமாக முதலிடம் கொடுப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017-ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2018-ம் ஆண்டில் ஆன்லைன் டேட்டிங் தொடர்பான விஷயங்களை தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment