இந்தியாவில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில்   கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை

By venu | Published: Aug 02, 2020 11:03 AM

இந்தியாவில்   கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டியுள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனைகட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வருகின்றது.மேலும் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கவும் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றது.

கொரோனா பாதிப்பில் உலக அளவில் 3-வது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடத்தில் அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளது.எனவே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,95,988லிருந்து 17,50,723ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,95,647லிருந்து 11,46,879ஆகவும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511லிருந்து 37,403ஆக உயர்ந்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc