அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்த 3 படங்கள் என்ன தெரியுமா..?

அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்த 3 படங்கள் என்ன தெரியுமா..?

நடிகர் ரஜினி அண்ணாத்த படத்தை தொடர்ந்து மூன்று பெரிய படங்களில் நடிக்கவுள்ளார். 

ரஜினி நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் தர்பார், இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல ஒரு விமர்சனத்தையும், நல்ல வசூலையும் பெற்றது, இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்பொழுது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறபடுகிறது, இந்த படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த மூன்று படங்களை பற்றி பார்ப்போம்.

அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளார், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் லாரன்ஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளார். மேலும் அடுத்ததாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube