நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் ! சென்னைக்கு வந்த தனிப்படை காவல்துறையினர்

The Need for Change Special police who arrived in Chennai

நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5 பேர் சென்னை வந்துள்ளனர். தேனி மருத்துவ கல்லூரியில் நீட் தேர்வெழுதி பயின்று வந்த உதித் சூர்யா என்பவரது நீட் தேர்வு  நுழைவு சீட்டில் உள்ள புகைப்படமும்,  தற்போதைய புகைப்படமும் ஒன்றாக இல்லாத காரணத்தால் அவர் மீது சந்தேகம் எழுந்தது.இதன் பின்னர் அவர் மீது  புகார் அளிக்கப்பட்டது. உதித் சூர்யா மீது மூன்று பிரிவுகளின் கீழ் தேனி  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உதித் சூர்யா அவரது சென்னை வீட்டிற்கு சென்றுள்ளதால், அவரிடம் விசாரிக்க 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் தேனியில் இருந்து சென்னை வந்துள்ளனர்.உதித் சூர்யா வீட்டில் யாரும் இல்லாததால் அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.    

Five policemen from Theni have come to Chennai in search of student Udith Surya, who is involved in the complaint of the Need for Transition. Udit Surya, who was studying for NEET at the Theni Medical College, was suspicious because the photo and the current photo of the NEET entry ticket were not together. Theni police filed a case against Udit Surya under three sections. Since Udit Surya has gone to his home in Chennai, five policemen have come from Theni to investigate him.