நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் ! நீட்தேர்வு மூலம் சேர்ந்த 250 மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க முடிவு

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நீட்தேர்வு மூலம் சேர்ந்த 250 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகிறது.

தேனி மருத்துவ கல்லூரியின் டீனுக்கு இ-மெயிலில் புகார் ஓன்று அளிக்கப்பட்டது.அந்த புகாரில் உதித்  சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்டது. பின் மருத்துவ கல்லூரியில் நீட் தேர்வெழுதி பயின்று வந்த உதித் சூர்யா என்பவரது நீட் தேர்வு  நுழைவு சீட்டில் உள்ள புகைப்படமும்,  தற்போதைய புகைப்படமும் ஒன்றாக இல்லாத காரணத்தால் அவர் மீது சந்தேகம் எழுந்தது.இதன் பின்னர் அவர் மீது காவல்  நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.ஆனால் அந்த மாணவன் மனஅழுத்தம் காரணமாக படிப்பை பாதியில் விட்டுவிட்டு சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.மேலும் நீட் தேர்வில்  ஆள் மாறாட்டம் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்  மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நீட்தேர்வு மூலம் சேர்ந்த 250 மாணவர்களின் சான்றிதழ்கள் நாளை முதல் (அதாவது இன்று முதல் )சரிபார்க்கப்படும் என்று  மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் வனிதா தெரிவித்துள்ளார்.