இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற 22 எம்எல்ஏக்களின் பெயர்கள் அரசிதழில் வெளியீடு

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மக்களவை தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.  இடைத்தேர்தல் முடிவுகளில் திமுக 13 இடங்களிலும்,அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழக இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற 22 எம்எல்ஏக்களின் பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.திமுக எம்எல்ஏக்கள் 13 பேரின் பெயரும்,அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேரின் பெயரும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Comment